மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் டிக்கெட் விபரம் வெளியீடு

மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் வைபவம் காண டிக்கெட் பெறும் விபரம் வெளியாகியுள்ளது.;

Update: 2025-04-15 12:32 GMT
மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் டிக்கெட் விபரம் வெளியீடு
  • whatsapp icon
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 2025ம் ஆண்டு திருக்கல்யாணத்தினை தரிசிப்பதற்காக திருக்கல்யாண நுழைவு கட்டணச்சீட்டினை hrce.tn.gov.in w madurai meenakshi.hrce.tn.gov.in என்ற இணையதளங்களில் 29.04.2025 முதல் 02.05.2025 முடிய மட்டுமே ஆன்-லைனில் பதிவு செய்ய இயலும் ஆதார், மொபைல் எண், அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களை அளித்து மேற்கு சித்திரை வீதியில் உள்ள பிர்லா விஷ்ரம் விடுதியில் நேரடியாகவும் கட்டணச்சீட்டை பெறலாம். ஒருவர் ரூ.500/- மதிப்பிலான கட்டணச்சீட்டு ஒரு பதிவில் ஒருவர் இரண்டு கட்டணச்சீட்டுக்களுக்கு மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர். ஒருவர் ரூ.200/- மதிப்பிலான கட்டணச்சீட்டு ஒரு பதிவில் ஒருவர் மூன்று கட்டணச்சீட்டுக்களுக்கு மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர். ரூ.200, ரூ.500 கட்டணச்சீட்டு பெற்றவர்கள் வடக்கு கோபுரம் வழியாகவும், கட்டணச்சீட்டு பெறாதவர்கள் இடவசதிக்கு ஏற்ப தெற்கு கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்படுவர்.

Similar News