காவேரிப்பட்டணம்: கஞ்சா வைத்திருந்த இரண்டு பேர் கைது.

காவேரிப்பட்டணம்: கஞ்சா வைத்திருந்த இரண்டு பேர் கைது.;

Update: 2025-04-15 13:00 GMT
கிருஷ்ணகிரி மது விலக்கு அமல் பிரிவு போலீசார் காவேரிப்பட்டணம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்னர். அப்போது அந்த பகுதியில் சந்தேகம்படும்படி நின்ற இரண்டு பேரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்கள் கஞ்சா வைத்திருந் தது தெரிய வந்தது. இதை அடுத்து கஞ்சா வைத்திருந்ததாக கிருஷ்ணகிரி பாரதி நகர் முகமது ஆசாத் (20) மிட்டஅள்ளி புதூர் ஆறுமுகம் (33) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 700 ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News