விளாத்திகுளம் அருகே பொன் ஏர் பூட்டும் திருவிழா!

கோவில்பட்டி அருகே உள்ள சிங்கிலிபட்டி கிராமத்தில் பொன் ஏர் பூட்டுதல் நிகழ்ச்சியை விதைகளை தூவி கோட்டாட்சியர் மகாலட்சுமி தொடங்கி வைத்தார்.;

Update: 2025-04-15 13:18 GMT
விளாத்திகுளம் அருகே பொன் ஏர் பூட்டும் திருவிழா!
  • whatsapp icon
கோவில்பட்டி அருகே உள்ள சிங்கிலிபட்டி கிராமத்தில் பொன் ஏர் பூட்டுதல் நிகழ்ச்சியை விதைகளை தூவி கோட்டாட்சியர் மகாலட்சுமி தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சிங்கிலிபட்டி, கல்குமியில் தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாளில் நிலத்தில் ஏர்பூட்டி உழுது வைப்பது தமிழர்களின் பாரம்பரிய பழக்கவழக்கம். இந்த விழாவினை கம்பு பயிரை விதைத்து கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி தொடங்கி வைத்தார். தமிழகத்தின் பல பகுதிகளிலும் பொன்னேர் உழவு பூட்டுவதை இன்றும் ஒரு வழக்கமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் கிராமத்தில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் வளர்த்து வரும் காளை மாடுகளை குளிப்பாட்டி காளையின் உடம்பில் சந்தனம் குங்குமம் பூசியும் காளையின் கொம்புகளில் மலரைக் கொண்டு அலங்கரித்தனர், மேலும் டிராக்டர்களும் சந்தனம் குங்குமம் பூசி அலங்கரிக்கப்பட்டு கோவில்களில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்து விட்டு ஊர் பொதுமக்கள் தேர்ந்தெடுத்த நிலத்தில் உழவு செய்து கம்பு பயிரை விதைத்தனர். இவ்விழாவில் எட்டயபுரம் தாசில்தார் சுபா, கரிசல் பூமி விவசாய சங்க தலைவர் வரதராஜன் சிங்கிலிபட்டி மற்றும் கல்குமி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் .

Similar News