ஓசூர்: மத்திகிரி ஞானசக்தி விநாயகர் கோயிலில் வருடாபிஷேக விழா.
ஓசூர்:மத்திகிரி ஞானசக்தி விநாயகர் கோயிலில் வருடாபிஷேக விழா.;

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள மத்திகிரி காமராஜர் நகரில் உள்ள ஞான சக்தி விநாயகர் திருக்கோயிலில், தமிழ் புத்தாண்டை ஒட்டி, 16 வது ஆண்டு வருடாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதில் ஞான சக்தி ஈஸ்வரருக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு சிவ மும்மூர்த்திகளான கணபதி முருகன் ஐயப்பன் உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத புனித நதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட நீரை யாகத்தில் கலச பூஜை செய்து கலசத்தில் இருந்து புனித நீரை கும்பத்தின் மீது ஊற்றி வருடா அபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீ ஞான சக்தி விநாயகரை தரிசித்தனர்.