மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு
ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அவர்கள் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவதுதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக கோடைகாலப் பயிற்சி முகாம் ந நடைபெறும்;
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அவர்கள் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக 2025-ம் ஆண்டிற்கான கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் வரும் 25.04.2025 முதல் 15.05.2025 வரை 21 நாட்களுக்கு காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் நடைபெற உள்ளது. தடகளம், ஹாக்கி, டென்னிஸ், இறகுப்பந்து, ஜுடோ மற்றும் இதர விளையாட்டுக்களுக்கு பயிற்சி முகாமில் பங்கேற்றிட வீரர்கள் வீராங்கணைகளுக்கு பயிற்சி கட்டணம் கிடையாது. வீரர்கள் வீராங்கணைகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்த பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி முகாமில் பங்கேற்பதற்கு சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கம், ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர் நலன் அலுவலத்தில் நேரில் தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், அவர்கள் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.