வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தர்ணா போராட்டம்.

திருவாரூரில் நடைபெற்ற தர்ணா போராட்டம். வக்ஃபு திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.;

Update: 2025-04-17 17:54 GMT
திருவாரூர் ரயில் நிலையம் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வக்பு திருத்த சட்டத்தினை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி முருகையன் தலைமையில் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி‌.நாகராஜன் கலந்துகொண்டு ஒன்றிய மோடி அரசை கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினார்.

Similar News