வானுார் அரசு கலை கல்லுாரியில் ஆங்கில இலக்கிய மன்ற விழா
அரசு கல்லூரி முதல்வர் தலைமையில் நடைபெற்றது;
வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், ஆங்கில இலக்கிய மன்ற விழா நடந்தது.கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கி, ஆங்கிலத்தில் பேசுவதற்கும், எழுதுவதற்கும் கல்லுாரியில் கிடைக்கும் வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என, அறிவுரை வழங்கினார். ஆங்கிலத் துறை தலைவர் ராஜேஸ்வரி ஜெயராணி வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக விழுப்புரம் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் சின்னத்துரை கலந்து கொண்டு பேசினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.கவுரவ விரிவுரையாளர் சுனிதா நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.