அரகண்டநல்லூரில் புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு
சக காவலர்கள் வாழ்த்தி வரவேற்றனர்;
விழுப்புரம் மாவட்டம்,கண்டாச்சிபுரம் வட்டம், அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த வட்ட ஆய்வாளர் சாகுல் அமீது பணியிட மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக இன்று(ஏப்18) அரகண்டநல்லூர் காவல் நிலைய புதிய வட்ட காவல் ஆய்வாளராக பிரேம் ஆனந்த் பொறுப்பு ஏற்று கொண்டார்கள். அவருக்கு சக காவலர்கள் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.