ஆசனூரில் சிறுத்தை புலி நடமாட்டம் பொதுமக்கள் அச்சம்

ஆசனூர் பகுதியில் இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க போலீசாருடன் ரோந்து செல்லும் கிராம மக்கள்;

Update: 2025-04-18 08:04 GMT
ஈரோடு மாவட்டம் ஆசனூர் பகுதிகளில் உள்ள பங்களாத்தொட்டி, ஓங்கல்வாடி பழைய ஆசனூர், கே.கே. நகர் தொட்டி ஆகிய இடங்களில் வீட்டில் வளர்க்கும் மாடு, கோழி, நாய் போன்ற கால்நடைகளை கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை ஒன்று கொன்று குவித்து வருகிறது. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பு வேண்டி ஆசனூர் போலீஸ் நிலையத்திலும், வன அலுவலகத்திலும் புகார் மனு அளித்திருந்தனர்.அதன் அடிப்படையில் நேற்று இரவு முதல் ஆசனூர் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் போலீசார் அவர்களுடன் கிராம மக்கள் ஒன்றிணைந்து இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கிராமத்தின் முக்கிய பகுதிகளில் போலீசாருடன் கிராம மக்களும் இரவு நேரத்தில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Similar News