திருக்குறள் பேரவை சார்பில் மாணவிக்கு பரிசளிப்பு
சென்னிமலையில் உள்ள திருக்குறள் பேரவை சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போட்டி;
சென்னிமலையில் உள்ள திருக்குறள் பேரவை சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ் கையெழுத்தை ஊக்குவிப்பதற்காக திருக்குறள் மற்றும் ஆத்திசூடி பாடத்தை 40 நாட்களுக்குள் முழுமையாக எழுதி முடிக்கும் வகையில் போட்டியை நடத்தியது. இதில் 40 நாட்களில் திருக்குறள் மற்றும் ஆத்திசூடியை முழுமையாக எழுதி முடித்த சென்னிமலை அருகே பசுவபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி தாமரைசெல்விக்கு திருக்குறள் பேரவை சார்பில் திருவள்ளுவர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.