கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிர் இழப்பு.
ஜேடர்பாளையம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை.;
பரமத்திவேலூர், ஏப்.18: ஈரோடு மாவட்டம் பாசூர் அருகே உள்ள பச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 53), கூலித்தொழிலாளி. இவர் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அடுத்த சிறுநல் லிக்கோவில் பகுதியில் தங்கி அங்குள்ள மஞ்சள் தோட்டத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கதிர்வேல் அந்த தோட் டத்தில் உள்ள விவசாய கிணற்று மேட்டில் நேற்று முன்தினம் இரவு படுத்து தூங்கிக் கொண்டு இருந்தாக கூறப்படுகிறது. அப்போது தூக்கத்தில் நிலை தடுமாறி கிணற்றுக்குள் அவர் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தார். அதைக் கண்ட அந்த வழியாக சென்றவர்கள் தோட்டத்தின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து ஜேடர்பா ளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதிர்வேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.