பைக் மீது தனியார் பஸ் மோதல் வாலிபர் பலி: சிறுவன் படுகாயம்
விபத்து செய்திகள்;
மணமேல்குடி தாலுகா வீச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி (29).அதே ஊரை சேர்ந்தவர் சசி மகன் முரளி (17). இவர்கள் இருவரும் பைக்கில் கீரனுார் அருகே உள்ள இளையாவயல் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு ஊருக்கு திரும்பினர். புதுக்கோட்டை நோக்கி சென்றபோது, அந்த வழியாக வந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக மோதியதில் பைக்கில் இருந்து துாக்கி வீசப்பட்ட திருமூர்த்தி அதே இடத்தில் உயிரிழந்தார். படுகாயமடைந்த முரளி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிந்து தனியார் பஸ் டிரைவர் திருமயம் அருகே உள்ள இளையான்குடிபட்டியை சேர்ந்த ஆனந்தன்(50) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.