பரமத்தி வேலூரில் ஓட்டலில் மது அருந்த அனுமதித்ததாக ஒருவர் கைது.

பரமத்தி வேலூரில் ஓட்டலில் மது அருந்த அனுமதித்ததாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2025-04-19 13:31 GMT
பரமத்தி வேலூர், ஏப்.19:   பரமத்தி வேலூர்--நாமக்கல் செல்லும் சாலை யில் உள்ள வெட்டுக்காட்டு புதூர் பால் குளிரூட்டும் நிலையம் எதிரே உள்ள ஒரு ஓட்டலில் தொடர்ந்து மது பிரியர்களை மது அருந்த அனுமதித்து வருவதாக பரமத்தி வேலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்க மது அருந்து அனுமதி அளித்துள்ளது தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் மது அருந்த அனுமதி அளித்ததாக யுவராஜ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News