அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் முப்பெரும் விழா அமைச்சர் பங்கேற்பு.

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் முப்பெரும் விழாவாக நடைபெற்ற பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா மற்றும் தமிழக்கூடல் விழாவானது தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர்.டி.ஆர்.பி.ராஜா தலைமையில் நடைபெற்றது.;

Update: 2025-04-19 15:00 GMT
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் முப்பெரும் விழாவாக நடைபெற்ற பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா மற்றும் தமிழக்கூடல் விழாவானது தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர்.டி.ஆர்.பி.ராஜா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் ஆகியோர் உடனிருந்தனர். மாணவியர்கள் பல்வேறு திறனறி தேர்வில் வெற்றி பெற்று வருகிறார்கள். இதுபோன்று, மேன்மேலும் அதிக எண்ணிக்கையில் மாணவியர்கள் திறனறி தேர்வில் வெற்றி பெற வேண்டும். மேலும், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெறும் மாணவியர்களுக்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் அறிவித்தது போன்று 5 பவுன் தங்க செயின் வழங்கவுள்ளார். இதனை பெறவுள்ள மாணவியர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வ.மோகனச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். தொடர்ந்து, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி மாணவியர்களுக்கு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர்.டி.ஆர்.பி.ராஜா பாராட்டி கேடயங்களை வழங்கினார்கள்.

Similar News