கலைஞர் கைவினை திட்ட துவக்க விழா.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டங்கள் நடைபெற்ற கலைஞர் கைவினை திட்ட தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.;
தமிழ்நாடு முதலமைச்சர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் கலைஞர் கைவினைத் திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் கலைஞர் கைவினைத் திட்ட நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.