நீட் தேர்வை ரத்து செய்யாத திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி 22 மாணவர்களை பலியாக்கிய திமுக அரசை கண்டித்து முன்னால் அமைச்சர் தலைமையில் ஆர்ப்பாட்டம்.;

Update: 2025-04-19 17:53 GMT
திருவாரூரில் நீட் தேர்வை ரத்து செய்யப் போவதாக கூறி 22 மாணவர்களை உயிர் பலி வாங்கிய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியம் தெரியும் எனக் கூறி 22 மாணவர்கள் உயிர் பறிபோக காரணமாக இருந்த திமுக அரசை கண்டித்து திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பாக அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான இரா.காமராஜ் தலைமையில் திரளான அதிமுகவினர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து நீட் தேர்வால் உயிரிழந்த 22 மாணவர்களின் உருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கழக அமைப்பு செயலாளர் சிவா ராஜமாணிக்கம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சுரேந்தர், நகர செயலாளர் ஆர்டி . மூர்த்தி, மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை செயலாளர் கலியபெருமாள், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சின்னராஜ் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Similar News