கபடி வீரர்களுக்கு பரிசு வழங்கிய எம்எல்ஏ

தமிழன் பிரிமியர் லீக் போட்டிகளில் நம் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் அதற்காக நீங்கள் கடுமையாக பயிற்சி செய்யுங்கள் என்று கூறி கபடி வீரர்களுக்கு பாராட்டுதல் தெரிவித்தார்;

Update: 2025-04-19 18:08 GMT
கபடி வீரர்களுக்கு பரிசு வழங்கிய எம்எல்ஏ பெரம்பலூர் நகர விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற வீரர்களுக்கு இன்று மாவட்ட திமுக அலுவலகத்தில் பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் ஆகியோர் பரிசு வழங்கினார்கள். இந்நிகழ்வில், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Similar News