நீர் தேக்க தொட்டி கட்டும் பணி

குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி விரைவில் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை;

Update: 2025-04-20 14:09 GMT
பெரம்பலூர் ஒன்றியம் செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தென் பகுதியில் ஊராட்சி குடிநீர் கிணறுடன் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டு புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணி தொடங்கி நடைப்பெற்று வருகின்றன. இதனால் இந்த வளாகத்தில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தில் பொருத்தப்பட்ட மின் மோட்டார் உதவியுடன் கிணற்றில் இருந்து காலையில் இருமுனை மின்சாரம் இருந்த போதும் ஊராட்சி நிர்வாகம் நாள்தோறும் வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்தன. ஆனால் கடந்த சில மாதங்களாகவே வழக்கமான நேரத்தில் வீடுகளுக்கு தண்ணீர் கிடைப்பது இல்லை.இது குறித்து பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டப்போது தற்போது மும்முனை மின்சாரம் இருக்கும் போது மட்டுமே குடிநீர் கிணற்றில் இருந்து மின் மோட்டார் உதவியுடன் நேரடியாக வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடிகிறது என தகவல் தெரிகிறது. காலையில் வழக்கமான நேரத்தில் வீடு தோறும் குழாய்களில் குடிநீர் வராததால் பெரிதும் அவதியுற்று வருகின்றனர் . எனவே இருமுனை மின்சாரம் உள்ள போதும் தண்ணீர் விநியோகம் செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

Similar News