பரமத்தி வேலூர் புது மாரியம்மன் மகா சண்டிகா பரமேஸ்வரி யாகம்.
பரமத்தி வேலூர் புது மாரியம்மன் மகா சண்டிகா பரமேஸ்வரி யாகம் மற்றும் சங்காபிஷேகம் நடைபெற்றது.;
பரமத்தி வேலூர், ஏப். 20: : பரமத்தி வேலூர் பேட்டை ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மன் ஆலயத்தில் 48 ஆம் ஆண்டாக சண்டிகா பரமேஸ்வரி மகா ஹோமம் ஸ்ரீ லலிதா சகஸ்ர நாம லக்சார்ச்சனை நிகழ்ச்சி சேலம் ராஜராஜேஸ்வரி மகிலா சமாஜா ஸ்தாபகர் ராஜேஸ்வரி ஸ்ரீமத் மாதம்ப சரஸ்வதி மற்றும் யோக நிசம்பா சரஸ்வதி ஆகியோர் தலைமையில் யாக வேள்வி பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. 108 மூலிகை வேர்கள் 40 தாம்பாள தட்டுகளில் பூஜை வஸ்துகளை கொண்டு யாக வேள்வி நடைபெற்றது திருக்குட நன்னீர் யாகத்தில் வைக்கப்பட்டது புனித தீர்த்தங்களை கொண்டு புது மாரியம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது இறுதியாக மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் பரமத்தி வேலூர் பேட்டை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்த கோடிகள் பொதுமக்கள் என திரளானவர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள், விழா குழுவினர், கட்டளைதாரர்கள், மற்றும் பேட்டை ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.