பரமத்தி வேலூரில் அ.தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு.
பரமத்திவேலூரில் அ.தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தல் முன்னாள் அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.;
பரமத்தி வேலூர், ஏப்.20: பரமத்தி வேலூரில் அ.தி. மு.க. சார்பில் பரமத்தி வேலூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. திறப்பு விழாவிற்கு பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர் தலைமை வகித்தார். கபிலர்மலை யூனியன் முன்னாள் சேர்மன் ஜே.பி.ரவி, பொத்தனூர் பேரூர் செயலாளர் எஸ்.எம். நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமத்தி வேலூர் பேரூர் செயலாளர் பொன்னி வேலு வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்ட செயலாளரும், குமாரபாளையம் எம். எல்.ஏ.வுமான தங்கமணி கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து தர்பூசணி பழம் வெள்ளரிக்காய் உள்ளிட்ட பல்வேறு பழங்களை வழங்கினார். முன்னதாக எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பரமத்தி பேரூர் செயலாளர்' சுகுமார், மாவட்ட வக்கீல் அணியை சேர்ந்த வக்கீல் நடராஜன், வக்கீல் லோகநாதன், வக்கீல் தனசேகரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் பொறுப்பாளர்கள், பல்வேறு அணி பொறுப்பா ளர்கள், மகளிர் அணி பொறுப்பாளர்கள், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.