ராமநாதபுரம் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அமைச்சர் பொன்முடியை சர்ச்சைக்குரிய பேச்சை கண்டித்தும், ராமநாதபுரம் நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் அதிமுக மாவட்ட மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;

Update: 2025-04-21 08:52 GMT
ராமநாதபுரம் மாவட்டம் அமைச்சர் பொன்முடியை சர்ச்சைக்குரிய பேச்சை கண்டித்தும், ராமநாதபுரம் நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் அதிமுக மாவட்ட மகளிர் அணி சார்பில் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏராளமான அதிமுக மகளிர் அணி பங்கேற்று கன்னட கோஷங்களை எழுப்பினர்பெண்களை தொடர்ந்து இழிவுடுத்தும் வகையில் கீழ்த்தரமான முறையில் ஆபாசமாகப் பேசியுள்ள அமைச்சர் பொன் முடியை கண்டித்தும், ராமநாதபுரம் நகராட்சி நிர்வாக சீர்கேடு, பாதாள சாக்கடை உடைப்பு, குடிநீர் குழாய் உடைப்பு மற்றும் வரி உயர்வு உள்ளிட்டவைகளை கண்டித்து ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முனியசாமி தலைமையில் அதிமுக மகளிர் அணி மற்றும் அதிமுக கட்சி தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு திமுக அரசின் அமைச்சர் பொன்முடியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அமைச்சர் பொன்முடி புகைப்படத்தை செருப்பால் அடித்து பெண்கள் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

Similar News