ராமநாதபுரம் தெருக்களில் கழிவுநீர்த் தேக்கம்

கமுதியில் கழிவுநீர் வாருகால்தூர்வாரப்படாததால் மழை நீருடன் கழிவு நீரும் தெருக்களில் தேங்கி சுகாதாரச் சீர் கேடு நிலவுகிறது.;

Update: 2025-04-22 04:22 GMT
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் 2-ஆவது வார்டுக்கு உள்பட்ட பகுதியில் பேருந்து நிலையம் அருகிலிருந்து குண் டாறு பாலம் வரை பல ஆண்டுகளாக கழி வுநீர் வாருகால் தூர்வாரப்படாமல் உள் ளது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த பலத்த மழையால் கழிவுநீர் தெருக்களுக்குள் புகுந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. கழிவுநீர் வாருகாலைத் தூர்வாரக்கோரி கடந்த மாதம் பொதுமக்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இருப்பினும் வாருகால் தூர்வாரப்படாததால் பொது மக்கள் தொற்று நோய் அச்சத்தில் உள்ள னர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு, கழிவுநீர் வாருகாலை தூர்வார நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக் கள் கோரிக்கை விடுத்தனர்.

Similar News