ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

அரசு பேருந்து, காவிரி கூட்டு குடிநீர் முறையாக வருவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க தமுமுக கோரிக்கை.;

Update: 2025-04-22 04:51 GMT
ராமநாதபுரம் மாவட்டம்அரசு பேருந்து, காவிரி கூட்டு குடிநீர் முறையாக வருவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க தமுமுக கோரிக்கை. ராமநாதபுரம் முதல் ரெகுநாதபுரம் (வழி சேதுக்கரை)வழித்தடத்தில் 5ஏ பேருந்து இயங்கி கொண்டிருந்தது. தற்போது பல மாதங்களாக இந்த வழித்தடத்தில் முறையாக இந்த பேருந்தானது இயங்கவில்லை. ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே வந்து செல்கிறது. தண்டரேந்தல், மேலப்புதுக்குடி, வெள்ள பிள்ளையார் கோவில், சேதுக்கரை , கீழப்புதுக்குடி, பிச்சாவலசை, சிலையப்பன்வலசை, காவல்காரன் வலசை, தினைக்குளம், நாடார் குடியிருப்பு, சண்முகவேல் பட்டிணம், காக்கையான் வலசை, கட்டையன் பேரன் வளைவு, மங்கம்மாள் சாலை ஆகிய பகுதியில் வசிக்கும் கிராம மக்கள், மற்றும் தினைக்குளம் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளும் ஆசிரியர்களும் இந்த வழித்தடத்தில் பேருந்து சரிவர இயக்கப்படாத்தால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். காஞ்சிரங்குடி ஊராட்சிபகுதி சுற்றியுள்ள கிராமங்களுக்கும் காவேரி கூட்டு குடிநீர் சரியான முறையில் வராததால் மக்கள் குடிநீரை அதிக விலை கொடுத்து வாங்கும் தருவாயில் உள்ளது. இது சம்பந்தமாக அதிகாரியிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த குறையை கவனத்தில் கொண்டு, அரசு பேருந்து மற்றும் குடிநீர் சரியான நேரத்தில் முறையாக வருவதற்கு அரசு இது தொடர்பாக உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக முதல்வர் அவர்கள் மக்களின் அடிப்படை வசதிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து செயல் படுத்தி வருகிறார்கள். ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் அடிப்படை வசதிகள் செயல் படுத்த விடாமல் ஒரு சிலர் திட்டமிட்டு தடுத்து வருகிறார்கள்.ஆகவே தமிழக அரசு சார்பில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ஊறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமுமுக சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்

Similar News