திமுக மாணவரணி சார்பில் மத்திய அரசு மற்றும் அதிமுகவின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம்
பரமத்தி வேலூரில் மத்திய அரசு மற்றும் அதிமுகவின் செயல்பாடுகள் குறித்த திமுக சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.;
பரமத்திவேலுார்,ஏப்.22 நாமக்கல் மாவட்ட திமுக மாணவரணி சார்பில் பரமத்திவேலுாரில் மத்திய அரசு மற்றும் அதிமுகவின் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மகிழ் பிரபாகரன் தலைமை வாங்கித்தார். பரமத்திவேலுார் பேரூர் திமுக செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கே எஸ். மூர்த்தி சிறப்பு அழைப்பளராக கலந்துகொண்டு துண்டு பிரசுரம் வழங்கள் வழங்கினார். பொதுமக்களிடையே பரமத்தி வேலூர் பேருந்து நிலையத்தில் பா.ஜ.க வோடு கூட்டணி வைத்துக்கொண்டு அ.தி.மு.க., நடத்தும் நீட் தேர்வு குறித்த அரசியல் நாடகத்தை கண்டித்து, மாவட்ட தி.மு.க., மாணவர் அணியினர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துஇருந்த பயணிகள், பேருந்துகளில் அமர்ந்திருந்த பயணிகள், ஓட்டுநர்கள் ,நடத்துனர்கள், மாணவ, மாணவிகள், பேருந்து நிலையத்தில் வைத்துள்ள பல்வேறு கடைக்காரர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் ஆகியோரிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரம் செய்தனர். பரமத்திவேலுார் பேருந்து நிலையத்தில் தொடங்கிய பிரச்சாரம் முக்கிய வீதிகள் மற்றும் திருவள்ளுவர் சாலை வழியாக நான்கு ரோடு வரை சாலையில் நடந்து வரும் பொதுமக்கள் சாலையின் இருபுறமும் உள்ள கடைக்காரர்கள் ஆகியோர்களிடம் துண்டு பிரசங்கங்களை கொடுத்தனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் கண்ணன், நாமக்கல் மேற்கு மாவட்ட நெசவாளர் அணி தலைவர் மூர்த்தி என்கிற முரளி,நாமக்கல் மாவட்ட வழக்கறிஞர்கள் அணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் செந்தில்குமார், வக்கீல் பாலகிருஷ்ணன்,நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பூக்கடை சுந்தர், நவலடிராஜா,பரமத்தி வேலூர் பேரூராட்சி துணைத் தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மேற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பாலசுப்பிரமணியன், வரவேற்றார். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பரமத்திவேலுார் பேரூர் கழக துணை செயலாளர் செந்தில்குமார், பேரூர் கழக நகர அவைத் தலைவர் மதியழகன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் , மாணவரணி மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர்கள், வார்டு செயலாளர்கள், மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக பொறுப்பாளர்கள், பல்வேறு அணி பொறுப்பாளர்கள், மகளிர் அணி பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர