சிவன் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு
சிவனடியார்கள் பெண்கள், தினவழிபாடு வார வழிபாட்டு குழுவினர் என 55-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மாணிக்கவாசகர் சுவாமி அருளிய சிவபுராணம் முதல் அச்சோ பதிகம் வரை அனைத்து பதிகங்களையும் பாராயணம் செய்தனர்;
சிவன் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு பெரம்பலூரில் உள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தினவழிபாட்டு குழு மற்றும் வார குழு சார்பில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சிவனடியார்கள் பெண்கள், தினவழிபாடு வார வழிபாட்டு குழுவினர் என 55-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மாணிக்கவாசகர் சுவாமி அருளிய சிவபுராணம் முதல் அச்சோ பதிகம் வரை அனைத்து பதிகங்களையும் பாராயணம் செய்தனர்.