சட்டப்பேரவையில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை
1000 ஆண்டுகள் பழமையான வாலிகண்டபுரம், திருவாலந்துறை, காரியானூர் சிவ ஆலயங்களுக்கு திருப்பணி செய்து குடமுழுக்கு செய்ய வேண்டும்;
சட்டப்பேரவையில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், சட்டப்பேரவையில் நேற்று (ஏப்.22) பெரம்பலூர் தொகுதிக்குட்பட்ட 1000 ஆண்டுகள் பழமையான வாலிகண்டபுரம், திருவாலந்துறை, காரியானூர் சிவ ஆலயங்களுக்கு திருப்பணி செய்து குடமுழுக்கு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு விரைவில் 3 கோவில்களுக்கும் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்தப்படும் என்றார்