வாலிபரிடம் ஒன்றரை கோடி ரூபாய் ஏமாற்றியவர் கைது
சிவராமலிங்கத்தை கைது செய்து நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்;
வாலிபரிடம் ஒன்றரை கோடி ரூபாய் ஏமாற்றியவர் கைது பெரம்பலூர் கபாணி நகரைச் சேர்ந்தவர் நல்லுசாமி (31). இவர் தனது உறவினரான கணபதி நகரைச் சேர்ந்த சிவராமலிங்கம்(44) என்பவருக்கு கடனாக ரூ.1 கோடியே 52 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் கடன் தொகையை திருப்பி கொடுக்காமல் நல்லுசாமியை ஏமாற்றி வந்துள்ளார். இது தொடர்பாக நல்லுசாமி புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து சிவராமலிங்கத்தை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.