இளம் சிறுத்தைகள் கபடி குழு மற்றும் புரட்சியாளர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் மாபெரும் கபாடி போட்டி

கபாடி போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு வழங்கும் விழா;

Update: 2025-04-22 17:52 GMT
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் மறவநத்தம் கிராமத்தில் இளம் சிறுத்தைகள் கபடி குழு மற்றும் புரட்சியாளர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் மாபெரும் கபாடி போட்டி நடைபெற்றது . கபாடி போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு வழங்கும் விழா 21.04. 2025 அன்று நடைபெற்றது விழாவில் சிறப்பு அழைப்பாளராக அரசு ஊழியர் ஐய்க்கிய பேரவையின் மாவட்ட துணைச் செயலாளர் விஏஓ முத்துசாமி எறையூர் பிரவீனா ஏஜென்சி உரிமையாளர் ஆறுமுகம், மறவநத்தம் வழக்கறிஞர் கரு.அய்யம்பெருமாள், மறவநத்தம் திமுக கிளைச் செயலாளர் சி. முருகேசன் வழக்கறிஞர் ப. சந்திரகுமார் , விசிக கிளைச் செயலாளர் செல்வகுமார் ஊர் முக்கியஸ்தர்கள் கொளஞ்சி, பெரியசாமி, அண்ணாதுரை, பரமசிவம், ராஜேந்திரன், சுரேஷ்குமார், மகேந்திரன்,மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பையும், ரொக்க பரிசும் வழங்கி சிறப்பித்தனர்.

Similar News