ராமநாதபுரம் வருவாய்த்துறை கூட்டம் நடைபெற்றது
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் முதல் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது;
ராமநாதபுரம் மாவட்டம் ஜனார்தன் மாளிகையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க ராமநாதபுரம் மாவட்ட தலைவர் எஸ். பழனிக்குமார் தலைமையில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் முதல் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் நில அளவை அலுவலர் ஒன்றிப்பு தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் இராமநாதபுரம் மாவட்ட எப். இ.ஆர்.எ கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.