மன்னார்குடியில் நடைபெற்ற உலக புத்தக தின விழா
மன்னார்குடி தமிழ் சங்கம் சார்பில் இன்று உலக புத்தக தினம் விழா தனியார் கல்லூரியில் நடைபெற்றது.;
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உலக புத்தக தின விழா மன்னார்குடி தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்றது. உதவி பேராசிரியர் முனைவர் கண்ணகி வரவேற்றார். கல்லூரி முதல்வர் முருகானந்தம்,முனைவர் அன்பரசு முன்னிலை வகித்தனர்.மன்னார்குடி தமிழ் சங்க தலைவர் விஜயசந்திரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.முனைவர் சதாசிவம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில் இன்றைய மாணவர்கள் தமிழை பிழை இன்றி எழுத,படிக்க பழக வேண்டுமென தெரிவித்தார்.மன்னார்குடியில் முன்னாள் நகரமன்ற தலைவர் சுதாஅன்புசெல்வன் பேசுகையில் நமக்கான அறிவை நாம் தான் வளர்த்துக்கொள்ள வேண்டும். படித்தால் தான் மொழி அறிவை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.தமிழ் துறையில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகள், பல்வேறு போட்டிகளில் வெற்றின்பெற்றவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.