ஜனவரி மாத மழையாலல் பாதிக்கப்பட்ட விவசாயத்திற்கு நிவாரணம் கேட்டு காத்திருப்பு போராட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மழையால் பாதிக்கப்பட்ட 60 ஆயிரம் ஏக்கர் சம்பா தாளடி விவசாயத்திற்கு இன்சூரன்ஸ் மற்றும் நிவாரணம் வேண்டி 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்முன்பு காத்திருப்பு போராட்டம்.புதுச்சேரி முன்னாள் வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் பங்கேற்பு;
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 17, 18-ல் பெய்த பருவம் தவறிய கனமழையால் 60,000 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதம் அடைந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தனர். ஆனால் இதுவரை எவ்வித நிவாரணமோ,காப்பீடோ வழங்கப்படவில்லை. எனவே பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கிட கோரியும், பயிர் காப்பீட்டு பிரிமியம் செலுத்தி பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் தமிழக அரசு உடனடியாக இழப்பீடு பெற்று தர வலியுறுத்தியும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் புதுச்சேரி மாநில முன்னாள் விவசாய துறை அமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். சார் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக எழுத்துப்பூர்வமான உறுதியளிக்கப்பட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் எனக்கூறி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.