போப் ஆண்டவர் மறைவுக்கு அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. பள்ளி. சார்பில் மவுன அஞ்சலி

குமாரபாளையத்தில் போப் ஆண்டவர் மறைவுக்கு அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ.பள்ளி சார்பில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.;

Update: 2025-04-23 08:21 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் போப் ஆண்டவர் மறைவுக்கு அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ.பள்ளி சார்பில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. போப் ஆண்டவர் உடல்நலக்குறைவால் காலாமானார். இவருக்கு உலகமெங்கும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இதன்  ஒரு கட்டமாக குமாரபாளையம் அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தலைமை ஆசிரியை சுகந்தி தலைமை வகித்தார். போப் ஆண்டவர் குறித்து சுகந்தி, மாணவ, மாணவியரிடம் பேசினார். மாணவ, மாணவியர் அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது ஆன்மா சாந்தி பெற வேண்டிக்கொண்டனர்.

Similar News