ராமநாதபுரம் நியாயவிலைக் கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம்

முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்;

Update: 2025-04-23 10:55 GMT
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பாக விரல்ரேகை பதிவு, ஆதார் சரிபார்ப்பு மீண்டும் நடைமுறைப்படுத்துதல், பொது விநியோகத் திட்டத்திற்கு தனி துறை அமைக்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்கப்பட வேண்டும், கல்வித் தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்குதல், IAS தலைமையில் ஊதிய குழு அமைத்து ஒன்பதாவது மாநில ஊதிய மாற்ற குழு உடன் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஏற்கனவே நிலுவையில் உள்ள 30 அம்ச கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி நிறைவேற்றாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ரேஷன் கடை பணியாளர்கள் பங்கேற்று அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Similar News