வாழவந்தி ஊராட்சியில் கோவில் தேர் திருவிழா நடைபெற ஏதுவாக சாலைகளை சீரமைக்க வேண்டும்.
பரமத்திவேலூர் அருகே வாழவந்தி ஊராட்சியில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற ஏதுவாக சாலைகளை சீரமைக்க வேண்டும் என சட்டசபையில் என்ஜினீயர் சேகர் எம்.எல்.ஏ. பேச்சு.;
பரமத்தி வேலூர், ஏப்.23: பரமத்தி வேலூர் தொகுதிக்குட்பட்ட வாழவந்தி ஊராட்சியில் பழுதடைந்து ள்ள சாலையால் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறாமல் இருக்கிறது என்று சட்டப்பேரவையில் பரமத்தி வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ஜினீயர் சேகர் பேசினார். தமிழக சட்ட பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது பரமத்தி வேலூர் தொகுதி என்ஜினீயர் சேகர் எம். எல்.ஏ. துணை கேள்வி எழுப்பி பேசிய போது மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வாழவந்தி ஊராட்சியில் சாலை மிகவும் மோசமாக பழுதடைந்து இருப்பதால் அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதற்கு ஏதுவாக பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என பேசினார். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பதில் தெரிவித்தார்.