குலமணிக்கத்தில் புதிய கிராம நிர்வாக அலுவலகம் கேட்கும் மக்கள்
கோட்டூர் அருகே குலமாணிக்கம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் பலுதடைந்ததால் 7 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கும் கிராம நிருவாக அலுவலகம்;
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே குலமாணிக்கம் ஊராட்சியில் பிடாரன்கோவில்பத்து,வடபாதி, தென்பாதி,குலமாணிக்கம் ஆகிய கிராமங்களில் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இங்கு கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் செயல்பட்டு வந்த நிலையில் கட்டிடம் பழுதடைந்து தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.இதனால் சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கலப்பால் கிராமத்தில் கடந்த 7 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.இதனால் சாதி சான்றிதழ் இருப்பிடச் சான்றிதழ் வருவாய் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு அரசின் சான்றிதழ்களை பெற முடியாமல் பள்ளி கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் அவதி உற்று வருகின்றனர்.இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர் மக்கள் பிரதிநிதிகளுக்கு மனு அளிக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக குலமாணிக்கம் பகுதியில் புதிய கிராம நிர்வாக அலுவலகத்தை கட்டி தர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.