லாரி மோதியதில் மூதாட்டி பலி

மதுரை மாவட்டம் மேலூர் அருகே லாரி மோதியதில் மூதாட்டி பலியான சம்பவம் நடந்துள்ளது.;

Update: 2025-04-24 04:24 GMT
மதுரை மேலூர் அருகே உள்ள கோட்ட நத்தம்பட்டியைச் சேர்ந்த ருத்ரன் மனைவி சுந்தரி (62) என்பவர் தனது மருமகள் தமிழரசியுடன் இரு சக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் (ஏப்.22) மாலை சென்ற போது மதுரை- சிவகங்கை சாலை வண்ணாம்பாறைப்பட்டி அருகே பெருங்கரையான் கண் மாய் அருகே சாலை சீரமைப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. அங்கு சாலைப் பணிக்கான பொருள்களை லாரியிலிருந்து இறக்கிக் கொண்டிருந்தனர். இதனால் இரு சக்கர வாகனத்திலிருந்து இறங்கிய சுந்தரி, லாரி அருகே நடந்து சென் றார். அப்போது திடீரென லாரியை ஓட்டுநர் இயக்கியதில், அது சுந்தரி மீது மோதியதில் பலத்த காயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கீழவளவு போலீசார் லாரி ஓட்டுநர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News