கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
மதுரை சோழவந்தான் அருகே கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சித்தநாதன் மகன் முரளி (19) என்பவர் திருப்பரங்குன்றம் அருகே உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந் நிலையில், முரளி வீட்டின் படுக்கையறையில் கைப்பேசியை அதிகம் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதை பெற்றோர்கள் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த முரளி, வீட்டில் நேற்று முன்தினம் (ஏப்.22) தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.இதுகுறித்து காடுப்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.