பரமத்திவேலூர் அருகே விபத்தில் கூலித்தொழிலாளி பலி.
பரமத்திவேலூர் அருகே விபத்தில் கூலித்தொழிலாளி பலி போலீசார் விசாரணை.;
பரமத்திவேலூர், ஏப்.24: கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே உள்ள புள்ளாம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 65). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் அதிகாலை பரமத்தி வேலூர் அருகே உள்ள ஊஞ்சப்பாளையத்திற்கு வேலைக்காக தனது மொபட்டில் கரூரில் இருந்து நாமக்கல் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். பரமத்திவேலூர் அருகே அணிச்சம்பாளையம் பிரிவு சாலை அருகேசென்றா அப்போது பின்னால் வந்த வாகனம் பெரியசாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயம். அடைந்து உயிருக்கு போராடினார். அந்த வழியாக சென்ற வர்கள் உடனடியாக அவரை காப்பாற்றி ஆம்புலன்சு மூலம் வேலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து பெரியசா மியின் மகன் பழனிவேல் வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.