மோகனூர் அருகே மோட்டார்சைக்கிள் மோதி கண்டக்டர் பலி.

மோகனூர் அருகே சாலையை கடக்க முயன்றபோது மோட்டார்சைக்கிள் மோதி கண்டக்டர் பலி.;

Update: 2025-04-24 11:37 GMT
பரமத்தி வேலூர்,ஏப்.24: நாமக்கல் மாவட்டம், மோகனூர் போலீஸ் சரக்கத் திற்கு உட்பட்ட அணியாபு ரம் அடுத்த கீழ்பரளி கால னியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 25). இவர் நாமக்கல் உள்ள தனியார் மினி பஸ்ஸில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன் தினம் இரவு வேலை முடித்து வீட்டிற்குசெல்வதற்காககண வாய்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து நடந்து சாலையை கடக்க முயன்றுள்ளார். அப் போது நாமக்கல் அருகே உள்ள குஞ்சாம்பாளை யத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் (29) என்பவர் தனது மோட் டார் சைக்கிள் வந்தார். அப்போது நிலைதடுமாறி கிருஷ்ணன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 பேரும் காயம் அடைந்தனர்.    அங்கிருந்தவர்கள் அவர் களை மீட்டு தனியார் ஆம்பு லன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கிருஷ் ணன் இறந்து விட்டதாக கூறி னர். காயம் அடைந்த ரவிச்சந்திரன் சிகிச்சை பெற்று வருகிறார் வருகிறார். இது குறித்து கிருஷ்ணனின் தந்தை செல்வராஜ் (45) மோக னூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்லட் சுமணதாஸ், சப்-இன்ஸ்பெக் டர் இளையசூரியன் ஆகி யோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். கிருஷ்ணனின் உடலை பிரேதபரிசோதனைக்கு பிறகு செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

Similar News