அமராவதி பாலத்தில் முன்னாள் சென்ற சரக்கு வாகனம் திடீரென பிரேக்கிட்டதால் பின்னால் வந்த டூவீலர் மோதி விபத்து.
அமராவதி பாலத்தில் முன்னாள் சென்ற சரக்கு வாகனம் திடீரென பிரேக்கிட்டதால் பின்னால் வந்த டூவீலர் மோதி விபத்து.;
அமராவதி பாலத்தில் முன்னாள் சென்ற சரக்கு வாகனம் திடீரென பிரேக்கிட்டதால் பின்னால் வந்த டூவீலர் மோதி விபத்து. மதுரை மாவட்டம், உலகநேரி, கன்னி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நீதிபதி மகன் புருஷோத்தமன் வயது 20. இவர் ஏப்ரல் 22 ஆம் தேதி மதியம் 3 மணி அளவில், கரூர் - மதுரை சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் அமராவதி பாலத்தில் செல்லும்போது, ஈரோடு மாவட்டம், கொடுமுடி, தாமரை பாளையம், பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனிசாமி வயது 39 என்பவர் வேகமாக ஓட்டி வந்த சரக்கு வாகனம், புருஷோத்தமன் ஓட்டிச் சென்ற டூவீலரை முந்தி சென்று எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல் திடீரென பிரேக் இட்டதால், புருஷோத்தமன் ஓட்டி வந்த டூ வீலர் சரக்கு வாகனத்தின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞன் புருஷோத்தமனை மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த புருஷோத்தமனின் தாயார் பஞ்சவர்ணம் 42 என்பவர் அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக சரக்கு வாகனத்தை போக்குவரத்து விதிகளுக்கு மாறாக ஓட்டி, விபத்து ஏற்படுத்திய பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.