சோமனூர் ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள்- ரயில் சேவையில் மாற்றம்.
சோமனூர் ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள்- ரயில் சேவையில் மாற்றம்.;
சோமனூர் ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள்- ரயில் சேவையில் மாற்றம். திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து மதியம் 13.00 மணிக்கு கரூர் மாவட்டம் வழியாக இயக்கப்படும் திருச்சிராப்பள்ளி சந்திப்பு – பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ், 25.04.2025 அன்று சோமனூரில் ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருப்பூரில் நிறுத்தம் செய்யப்படும். பராமரிப்பு பணிகள் முடிந்ததும், திருப்பூரிலிருந்து பாலக்காடு நகரத்திற்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயிலாக, ரயில் எண்.16843 திருச்சிராப்பள்ளி சந்திப்பு – பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸின் அதே நிறுத்தங்களுடன் இயக்கப்படும் என கரூர் மாவட்டம் உள்ளடக்கிய சேலம் கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் மரியா மைக்கேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.