சாலை அமைக்கும் பணி குறித்து ஆய்வு!
ஒடுகத்தூர் அருகே முதல்வரின் சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 34 லட்சத்தில் புதிய யார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.;
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த வண்ணந்தாங்கல் ஊராட்சியில் இருந்து பங்களாமேடு வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் முதல்வரின் சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 34 லட்சத்தில் புதிய யார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சாலையின் தரம், அளவு குறித்து மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தார் சாலையில் ஏதேனும் மேடு பள்ளங்கள் உள்ளதா? என்று பார்வையிட்டார்.