மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கிடையேயான 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான 54 வது மாநில அளவிலான கிரிக்கெட்டி போட்டி;

Update: 2025-04-24 17:17 GMT
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கிடையேயான 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான 54 வது மாநில அளவிலான கிரிக்கெட்டி பெரம்பலூர் பிஎம் ஸ்ரீகேந்திரிய வித்யாலயா பள்ளியில் இன்று (23ம்தேதி) காலை தொடங்கியது. இந்த போட்டியில் சென்னை, ஆவடி, தாம்பரம், மதுரை, சூலூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த கேந்திரிய வித்யாலயா பள்ளி அணி கலந்து கொண்டுள்றது. இந்த போட்டி 25ம்தேதி வரை நடைபெறுகிறது. கிரிக்கெட் வாரிய சங்கத்தின் அதிகாரிகள் நடுவர் குழுவாக உள்ளனர். அணிகளுக்கிடையே ஒரு லீக் போட்டி நடைபெறுகிறமது. இதில் முதல் மூன்று இடத்தை பிடிக்கும் அணிக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இதில் முதல் இடத்தை வென்ற அணி தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறுவார்கள் என பெரம்பலூர் பிஎம் ஸ்ரீகேந்திரிய வித்யலயா பள்ளி முதல்வரும், போட்டி ஒருங்கிணைப்பாளருமான மேகநாதன் தெரிவித்தார்.

Similar News