திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் நாளை ராகு கேது பெயர்ச்சி விழா
திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி விழா முன்னேற்பாடுகள் தீவிரம்;
ராகு கேது பெயர்ச்சி இரண்டு நாட்களே உள்ள நிலையில்..திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் விழா முன்னேற்பாடு.. திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோவில் தேவார பாடல் பெற்ற பழமையான சிவன் கோவிலாக விளங்கி வருகிறது. ஒரு காலத்தில் நாக இனங்களுக்கு ஏற்பட்ட சாபத்தால் ராகுவும் கேதுவும் ஏக சரீரமாக இருந்து... இக்கோவிலில் இறைவனை இதயத்தில் வைத்து பூஜை செய்து நாக இனங்களுக்கு சாப விமோசனம் கிடைக்கப் பெற்றதாக வரலாறு. இதன் காரணமாக கோவிலில் ராகுவும்,கேதுவும் ஏக சரீரமாக இருந்து அருள் பாலித்து வருகிறார்கள்.. ராகு மற்றும் கேது பெயர்ச்சிக்கு என தனித்தனி கோவிலுக்கு செல்லாமல்.. திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஏக சரீரமாக இருக்கிற ராகு கேதுவிற்கு பரிகாரம் செய்தாலே போதுமானது. தனித்தனி கோவிலுக்கு செல்ல தேவையில்லை.. மேலும். இங்குள்ள இறைவன் பாம்பரநாதரை வழிபட்டால் கும்பகோணம் நாகேஸ்வரர், திருநாகேஸ்வரம் திருநாகேஸ்வரர், நாகூர் நாகநாதர், காலகஸ்தி நாகலிங்கேஸ்வரர் ஆகிய சிவன் கோயில்களில் வழிபட்ட பலன் உண்டு. வருகிற 26-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4:20 மணிக்கு ராகு பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு இடம் பெயர இருக்கின்றனர். இதனை முன்னிட்டு.. பெயர்ச்சி அன்று அந்த நேரத்தில்..ஏக சரீரமாக விளங்கும் ராகு, கேது பகவானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற உள்ளது.. இந்த ராகு கேது பெயர்ச்சியினால் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சகம், கும்பம், மீனம் ஆகியவை ஆகும். இந்த விழாவை முன்னிட்டு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்தும்.. வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரிகார வழிபாடு செய்ய கலந்து கொள்வார்கள்.. இதனால் கோவில் நிர்வாகம் பக்தர்கள் சிரமம் இன்றி வழிபாடு செய்ய முன்னேற்பாடு செய்து வருகிறது.