ராமநாதபுரம் சந்தனக்கூடு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஏர்வாடி சந்தனக்கூடு சம்பந்தமான ஆலோசனை கூட்டம்.;

Update: 2025-04-25 04:16 GMT
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் உலக பிரசித்தி பெற்ற மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்ஹாவில் வருடம் தோறும் மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா பெரும் விமர்சியாக நடைபெறுவது வழக்கம்.அதனைத் தொடர்ந்து இந்த வருடத்தின் 851ம் ஆண்டின் சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழாவில் முதல் நிகழ்ச்சியாக ஏப் 29-ல் தொடங்குகிறது. திருவிழாவை காண வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் யாத்திரைகள் வருகை புரிவதால் முன்னேற்பாடாக வருகின்ற யாத்திரிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சம்பந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய ஆனந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கடந்த ஆண்டு குத்தகைக்காரர்கள் வாகனம் வசூல் செய்வதிலும் கடைக்காரர்களிடம் வசூல் செய்வதிலும் முறைகேடுகள் நடப்பதும் அடாவடித்தனமாக வசூல் செய்வதை தொடர்ச்சியாக செய்து வந்தனர் இது தொடர்பாக கடந்த ஆண்டு பல புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதனை சரி செய்யும் வகையில் இந்த ஆண்டு ஊராட்சி நிர்வாகம் நேரடியாக பணியாளர்களை வைத்து நிர்வாகம் செய்வதாக தெரிவித்தனர். கூட்டத்தில் கலந்துகொண்ட தர்கா நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றனர் இதனால் வியாபாரிகளுக்கும் வாகன ஓட்டுபவர்களுக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் இருக்கும் என்றும் குறைந்த வருமானத்தை பெறுவதனால் வியாபாரமும் குறைந்த முறையில் விற்பனை செய்ய வழிவகுக்கும் என்று தெரிவித்தனர் இதனை அனைவரும் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

Similar News