ஆட்சியர் அலுவலகக் கூட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
ஆட்சியர் அலுவலகக் கூட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.;
ஆட்சியர் அலுவலகக் கூட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் மாதத்தின் கடைசி வாரத்தில் மாவட்ட அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுவது வழக்கம். அதேபோல இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள், பல்வேறு துறை ரீதியான அதிகாரிகள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் உடனுக்குடன் விளக்கம் கேட்டு விவசாயிகளுக்கு தேவையான தகவல்களை அளித்தனர். மேலும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து விவசாயிகளுடைய பிரச்சனையை தீர்க்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியர் தங்கவேல் உத்தரவிட்டார்.