வெள்ளியம்பாளையம் அருகே விஷ பூச்சி கடித்து ஒருவர் உயிரிழப்பு.

வெள்ளியம்பாளையம் அருகே விஷ பூச்சி கடித்து ஒருவர் உயிரிழப்பு.;

Update: 2025-04-25 11:24 GMT
வெள்ளியம்பாளையம் அருகே விஷ பூச்சி கடித்து ஒருவர் உயிரிழப்பு. அரவக்குறிச்சி தாலுகா, கூடலூர் அருகே உள்ள வெள்ளியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் வயது 55. கூலித் தொழிலாளி. ஏப்ரல் 21ஆம் தேதி காலை 11 மணியளவில் அவரது வீட்டின் அருகில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது,விஷ பூச்சி ஒன்று இவரை தீண்டி உள்ளது. உடனே அவரது மகன் ராஜ்குமார் வயது 28 என்பவர்,தனது தந்தையை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக ராஜ்குமார் அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த சண்முகத்தின் உடலை அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சின்ன தாராபுரம் காவல்துறையினர்.

Similar News