கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து

வேடசந்தூர் அருகே கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து;

Update: 2025-04-25 12:52 GMT
திண்டுக்கல் வேடசந்தூர் அருகே உள்ள காக்காதோப்பூர் பிரிவில் அன்பரசன் என்பவர் பெங்களூரில் இருந்து மதுரையை நோக்கி கார் என்பவர் ஓட்டி வந்தார். கார் வேடசந்தூர் அருகே உள்ள காக்காதோப்பூர் நான்கு வழிச்சாலை வேடசந்தூர் பிரிவில் வரும் பொழுது திடீரென வேடசந்தூருக்கு செல்வதற்காக மதுரையிலிருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ் உள்ளே நுழைந்தது. இதில் கார் பஸ்ஸின் மீது மோதியதில் காரின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது காரில் வந்த இரண்டு பேரும் காயமடைந்தனர். தகவல் அறிந்த வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் சம்பவ இடத்தில் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு காயமடைந்தவர்களை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News