ராமநாதபுரம் காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது
காங்கிரஸ் கமிட்டி சார்பில் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி.;
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த இந்திய மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை MLA அறிவுறுத்தலின் படி ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினரும் நகர்மன்ற உறுப்பினருமான ராஜாராம் பாண்டியன் தலைமையில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். இதில் அனைத்து வட்டார, நகர, பேரூர் தலைவர்கள், மாநில, மாவட்ட, வட்டார, நகர நிர்வாகிகள், மகிளா காங்கிரசார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.