சொத்து வரி செலுத்துவோரருக்கு ஊக்கத் தொகை.
மதுரை சோழவந்தானில் சொத்து வரி செலுத்துவோரருக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.;
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி யில் 18 வார்டுகள் உள்ளது இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சோழவந்தான் பேரூ ராட்சிக்கு கட்டவேண்டிய சொத்து வரியை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் கட்டும் பொது மக்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சிக்குட்பட்ட வாடிப்பட்டி ரோடு ஆர் எம் எஸ் காலனி பத்மா கார்டன் விரிவாக்க போன்ற பகுதிகளில் குடியிருப்பவர்கள் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் தங்களது சொத்து வரியை பேரூராட்சி அலுவல் கத்தில் கட்ட வேண்டும் என தண்டோரா மூலம் அறிவிப்பு செய்யப்ப ட்டுள்ளது இதில் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் #ஊக்க த்தொகை வழங்கப்படும் எனவும் ஏப்ரல் 30ஆம் தேதிக்கு பின்பு சொத்து வரி செலுத்துபவர்கள் 1 சதவீதம் #கூடுதல் வரியுடன் கட்ட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.